வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 மே 2021 (19:46 IST)

சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது: மேயர் வருத்தம்

சென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது: மேயர் வருத்தம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பலர் முன் வந்த நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சென்னை மேயர் சுகன்தீப்சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’சென்னை மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சென்னையிலிருந்து பெரும்பாலானோரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டதால் தடுப்பூசி போடும் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.