1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (21:30 IST)

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து!

mayor priya
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் இன்று விபத்திற்குள்ளானது.

திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர் மேயர் இரா. பிரியா.  கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை   மாநகராட்சிக்குட்பட்ட திருவிக  நகரிலுள்ள 74 வது கோட்டத்தில் வென்று, சென்னை பெருநகர  மாநகராட்சியின் மேயராகப்   பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் இன்று விபத்திற்குள்ளானது.
 
நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும், முன்னால் சென்ற கார் திடீரென்று திரும்பியதால் மேயர் பிரியா சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டதாகவும், பின்னால் வந்த லாரியும்  மேயர் பிரியா சென்ற கார் மீது மோதியதாக தகவல் வெளியாகிறது.