செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (22:02 IST)

சென்னை - மதுரை தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிற்கும்: ரயில்வே துறை தகவல்

சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இனிமேல் திண்டுக்கல்லில் நிற்கும் என ரயில்வே துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
 
கடந்த சில மாதங்களாக சென்னை முதல் மதுரை வரை தேஜஸ் ரயில் விடப்பட்டுள்ளது என்பதும் இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் தான் இதுவரை நின்று கொண்டிருந்தது
 
இந்த நிலையில் இனிமேல் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும் என்றும் அதன்பின்னர் நிரந்தரமாக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்துக்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
ஏப்ரல் 4ஆம் தேதி முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதை அடுத்து திண்டுக்கல் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்