வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (12:43 IST)

சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலில் பயணிகளை ஒருமையில் பேசிய TTR !

சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயிலில் பயணிகளை ஒருமையில் பேசிய TTR'யை தட்டி கேட்ட பயணியின் மொபைல் போனை பிடுங்க முயற்சித்த சம்பவம் ரயிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு ரயிலில் பயணம் செய்த பயணியின் டிக்கெட்டை பரிசோதனை செய்யவந்த TTR  போய் உட்குரு என்று ஒருமையில் பேசியுள்ளார். இது குறித்து அந்த பயணி TTRரிடம் இவ்வாறு ஒருமையில் ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்க அவர் அப்படி தான் பேசுவேன் என்றும், மேலும் உங்கள் பெயர் என்ன என்று அந்த பயணி கேட்க அதை சொல்ல முடியாது எனவும் கூறியுள்ளார். 
 
இதனால் அந்த பயணி அந்த TTRஐ வீடியோ எடுக்க முயற்ச்சித்த போது பயணியின் செல் போன் பிடுங்க முயற்சி செய்ததொடு அவரை மீண்டும் ஒருமையில் பேசி அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.