வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (16:24 IST)

எப்போது தீர்ப்பு வழங்குவது என எங்களுக்குத் தெரியும். நீதிபதிகள் காட்டம்

தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பை வெளியிட கூடாது என்று பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவரின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
 
இன்று ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி செய்ய வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இந்த தீர்ப்பின்படி சட்டமன்ற சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி திமுகவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பை அளிக்கும் முன்னர் தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு முறையீடு செய்தார். அந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்குவது என எங்களுக்குத் தெரியும் என்றும் அறிவித்தபடி ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கக் கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
 
மேலும் ஒரு வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்குவது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் எப்போது தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கோர முடியாது என்றும் காட்டமாக கூறியதோடு தேவராஜனை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டனர்.