வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (15:41 IST)

லதா ரஜினி வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒன்று ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ளது. இந்த இடத்தில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் டிராவல் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை பல வருடங்களாக நடத்தி அதற்கு மாதம் ரூ.3,702 வாடகை செலுத்தி வருகிறார். ஆனால் திடீரென மாநகராட்சி நிர்வாகம் கடந்த. மார்ச் மாதம் முதல் ரூ.21,160 வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று லதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.






மாநகராட்சியின் இந்த திடீர் வாடகை கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லதா ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினி தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

9 ஆண்டுகளுக்கு பிறகே வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.