1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (13:49 IST)

விநாயகர் சிலைகள் கரைப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் புது உத்தரவு!

கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை நீர் நிலைகளில் கரைக்க உத்தரவு. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டு அன்றே கரைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை நீர் நிலைகளில் கரைக்கவும், கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை சேகரித்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவு.