வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (15:18 IST)

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல்: பெரும் பரபரப்பு..!

வழக்குகளை மாற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த மோதலில் 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டதாகவும், அவர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்கள் இடையிலான மோதலில் ஒருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
மேலும் நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இதுகுறித்து தகவல் அறிந்து  விரைந்து வந்த போலீசார், மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
 
 சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காரணமாக இரு நீதிமன்றங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 
Edited by Siva