1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (17:52 IST)

கரூர் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

திமுகவைச் சேர்ந்த கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார் 
 
இந்த வழக்கில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை மருத்துவமனைக்கு பயன்படுத்த திட்டமிட்டதாகவும், ஆனால் அதற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டதாகவும்அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை அடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது 
 
தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம், எதிர்க்கட்சி எம்எல்ஏ என்பதால் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் தடை விதிக்கப்பட்டதா? என்ற கேள்வியையும் கண்டனத்தையும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது இந்த உத்தரவு காரணமாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது