புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2020 (12:24 IST)

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கு! – தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கு! – தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரனையில் தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு மோகத்தால் பலர் பணத்தை இழப்பதால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்நிலையில் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மற்றும் செயலிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.

தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டன. அதன் மீதான இன்றைய விசாரணையில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் மீதான தடைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று மறுத்துள்ள நீதிமன்றம் டிசம்பர் 21க்குள் இதுதொடர்பான விளக்க அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.