வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (05:33 IST)

மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமா தனுஷ்கோடி? ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

1964ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழகத்தின் முக்கிய வணிகப்பகுதியாகவும், துறைமுக பகுதியாகவும் இருந்த தனுஷ்கோடி பயங்கர புயல் காரணமாக மொத்தமாக சிதைந்தது. தற்போது எஞ்சியிருப்பது பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என இடிந்த கட்டிட கூடுகள் மட்டுமே



 
 
இந்த பகுதி அரசாலும், பொதுமக்களாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது
 
இருப்பினும் இந்த பகுதி மனிதர்கள் வாழ தகுதியுடையதா என்று ஆராய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர். அவர்கள் கொடுக்க்கும் அறிக்கையை பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.