திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 4 மார்ச் 2020 (16:28 IST)

சென்னையில் வெடித்த நாட்டு வெடிக்குண்டு: பிரபல ரவுடிக்கு ஸ்கெட்ச்சா?

சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிக்குண்டு வீசியவர்களை பிடிக்க போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அண்ணா சாலை பகுதியில் நேற்று சாலையில் பைக்கில் சென்ற இருவர் எதிரே சென்ற காரின் மீது நாட்டு வெடிக்குண்டை வீசினார். அதிர்ஷ்டவசமாக கார் தப்பிவிட ரோட்டில் வெடித்தது வெடிக்குண்டு. இதனால் அருகில் இருந்த பைக் ஷோ ரூமின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

நாட்டு வெடிக்குண்டு வீசியவர்களை பிடிக்க போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவியில் பதிவான இருசக்கர வாகனத்தின் எண்ணை கொண்டு அதன் உரிமையாளரை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர் அந்த வாகனத்தை ஒரு மெக்கானிக் கடையில் வாங்கியுள்ளார். அவரது மகன் கல்லூரி செல்வதற்காக அந்த வண்டியை ஓட்டி வந்த நிலையில், தற்போது அந்த மாணவனும், அவனது நண்பனும் தலைமறைவாகி உள்ளனர்.

அவர்கள்தான் குண்டு வீசினார்களா அல்லது குண்டு வீசியவர்களுக்கு பைக்கை கொடுத்து உதவி செய்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குண்டை வீசி யாரை கொல்ல முயன்றார்கள் என்பது குறித்து போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் பிரபல ரௌடி ஒருவரை கொல்வதற்காக போட்ட ஸ்கெட்ச் என தெரியவந்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.