வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:52 IST)

சென்னையில் 1,243 பதற்றமான சாவடிகள்; 18 ஆயிரம் போலீஸார்! – காவல் ஆணையர் தகவல்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளன.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் பேசும்போது, சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளில் 27 ஆயிரம் பணியாளர் பணியாற்ற உள்ளதாகவும், தேர்தல் நாளன்று 18 ஆயிரம் போலீஸார் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கூட்டமாக சென்று வாக்கு சேகரிக்க கூடாது என்றும், பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.