இன்று முதல் சென்னை மாவட்டம் விரிவானது: முதல்வர் அறிவிப்பு

Last Modified வெள்ளி, 5 ஜனவரி 2018 (00:32 IST)
தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்த சென்னை மாவட்டம் இன்று முதல் விரிவடைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னையில் 55 வருவாய் கிராமங்கள் மட்டுமே இருந்த நிலையில் இன்று முதல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டது. இதனால் தற்போது சென்னை மாவட்டத்தில் 122 வருவாய் கிராமங்கள் உள்ளன. 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய சென்னை மாவட்டம் இன்று முதல் 426 சதுர கிலோ மிட்டர் பரப்பளவுடன் உள்ளது.

இதன்படி இனிமேல் சென்னை மாவட்டத்தின் மத்திய சென்னை கோட்டம் அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு, அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட 47 கிராமங்கள் உள்ளன. இதேபோல் வட சென்னைக்கோட்டத்திற்கு தண்டையார்பேட்டையைத் தலைமையிடமாக உள்ளது. இந்த கோட்டத்தில் திருவொற்றியூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 32 கிராமங்கள் அடங்கியுள்ளன. மேலும் தென் சென்னைக் கோட்டத்திற்கு கிண்டி தலைமையிடமாகவும், இதில் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, உள்ளிட்ட 43 கிராமங்களும் உள்ளன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :