1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:35 IST)

தமிழில் சென்னை காலநிலை செயல்திட்டம் வரைவு அறிக்கை: மாநகராட்சி தகவல்

Chennai Corporation
தமிழில் சென்னை காலநிலை செயல்திட்டம் வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
சென்னை காலநிலை செயல்திட்டம் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இன்னும் 2 நாட்களுக்குள் தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்து மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றப்படும் என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
ஒப்பந்ததாரர்களிடம் ஆட்கள் பற்றாக்குறையால் சில இடங்களில் திட்டப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும், சிரமங்களை பொதுமக்கள் பொறுத்தருள வேண்டும் என்றும்  சென்னை துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.