செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (12:27 IST)

பிரச்சாரம் ஓ.கே.. யாரை கேட்டு போஸ்டர் ஒட்டுனீங்க! – நீதிமன்றம் கடுமையான உத்தரவு!

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னையில் சுவரொட்டி ஒட்டிய வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் தனியார் சுவர்களில் வேட்பாளர்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுவது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு சுவரொட்டி விளம்பரம் செய்ய அனுமதியில்லை என சுட்டிக்காட்டி, சென்னையில் நகர்புற உள்ளாட்சிக்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறும், அதற்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் வசூலிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.