வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (11:16 IST)

ஸ்விகி, ஸொமாட்டோ மூலம் காய்கறி டெலிவரி – சென்னையில் சிறப்பு ஏற்பாடு

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையில் மக்கள் காய்கறிகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக மக்கள் தொடர்ந்து சாலைகளில் சுற்றுவதால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் வெளியே சுற்றுவதை தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக வீடுகளிலேயே டெலிவரி செய்ய ஸ்விகி, ஸொமாட்டோ மற்றும் டன்சோ ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி செயலர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் சிஎம்டிஏ அதிகாரப்பூர்வதளமான www.cmdachennai.gov.in தளத்தில் ரூ.250க்கு முன்பதிவு செய்தால் 13 வகை காய்கறிகள் மற்றும் 5 வகை பழங்கள் கொண்ட காய்கறி பை வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி சென்னையின் முக்கிய பகுதிகளில் நடமாடும் காய்கறி கடைகள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.