1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (20:26 IST)

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி அதிரடி

Chennai Corporation
சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் மற்றும் விளம்பர பதாகைகளை அதிரடியாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். 
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் புயல் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது விளம்பர  பலகைகளில் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள் மற்றும் முப்பத்தி மூன்று விளம்பர பதாகைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்படும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இந்த பணி மேலும் தொடரும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran