வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 மே 2024 (14:22 IST)

நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு ரூ.5 லட்சம்.. சென்னை மாநகராட்சி வழங்கியது..!

Chennai Corporation
சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காக சென்னை மாநகராட்சி ஐந்து லட்ச ரூபாய் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கடந்து சில நாட்களாகவே தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் பொதுமக்களை கடித்து வருகிறது, குறிப்பாக சிறுவர், சிறுமிகளை குறிவைத்து கடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்தால் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கம் பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை இரண்டு நாய் கடித்த நிலையில் அந்த சிறுமி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் 
 
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை என்பதாகவும் வெளிநாட்டிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாய் கடித்து படுகாயம் அடைந்த சிறுமியின் மருத்துவ செலவிற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஐந்து லட்சம் பணம் வழங்கப்பட்டது. மேலும் சிறுமிக்கு இன்று பகல் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran