திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (10:34 IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை – சென்னை மாநகராட்சி விளக்கம்!

சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி சமீபத்தில் 700 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. இதற்குக் காரணம் சென்னையில் உள்ள 11 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதுதான். அதனால் அந்த 7000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ‘தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ள தனியார் நிறுவனம், தொழிலாளர்களின் வயது மற்றும் உடல்தகுதி அடிப்படையில் வேலைகளை அளித்து வருகிறது. அதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதில் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன’ எனக் கூறியுள்ளது. ஆனாலும் சென்னை மாநகராட்சியின் இந்த விளக்கம் வெறும் கண்துடைப்பு என விமர்சனங்கள் எழுந்துள்ளன.