திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:27 IST)

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சென்னை கோவை இடையே நாளை வந்தே பாரத் ரயில் இயங்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இந்த ரயிலை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வர உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை கோவை இடையில் ஆன வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. 
 
இந்த ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் திருப்பூர் ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் மறு மார்க்கத்தில் மதியம் 2:25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் 08.15 மணிக்கு கோவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரயிலில்  AC Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 1,215 ரூபாயும், AC Executive Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 2,310 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran