1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 மே 2022 (12:42 IST)

சென்னை பேருந்துகளின் முழு விபரங்கள் அடங்கிய செயலி: அமைச்சர் அறிமுகம்

bus
சென்னை பேருந்துகள் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்வதற்காக சென்னை பஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார் 
 
இந்த செயலியை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு வரும் பேருந்துகள் எப்போது வரும்? எப்போது செல்லும்? தற்போது எங்கு உள்ளது? எத்தனை நிமிடம் கழித்து வரும் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இந்த செயலி சென்னை பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது