1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (17:44 IST)

தனியார் நகை கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை: அடகு வைத்தவர் நிலை என்ன?

jewelry
சென்னை அரும்பாக்கத்தில் நேற்று தனியார் நகை கடன் வாங்கிய 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொள்ளையர்களை பிடிக்க துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உள்ளது என்பதும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை அரும்பாக்கம் தனியார் நகைக்கடன் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் அந்த வங்கியில் அடகுவைத்த வாடிக்கையாளர்  நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது 
 
இதுகுறித்து தனியார் வங்கியின் தரப்பில் கூறப்பட்ட போது நகைகள் அனைத்தும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்ளை போன நகைகள் கிடைக்காதபட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது