புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (12:25 IST)

சென்னை பள்ளியில் ஆன்மீக பேச்சு: தலைமை ஆசிரியை, ஆசிரியை பணியிட மாற்றம்..!

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதல் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டம், அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திருமதி. ஆர்.தமிழரசி என்பவருக்கு காலியாக உள்ள திருவள்ளுர் மாவட்டம், கோவில்பதாகை, அரசு கீழ்காணுமாறு நிர்வாக மாறுதல் வழங்கி ஆணையிடப்படுகிறது.

சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ஆர்.தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

மேற்காணும் தலைமை ஆசிரியரை பணிவிடுவிப்பு செய்யும்போது அன்னார் பணிபுரியும் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சென்னை முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Mahendran