1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (12:04 IST)

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு: விமானங்கள் புறப்படுவதில் சிக்கல்..!

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும், அதிகாலை விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதி அடைந்ததாகவும் தெரிகிறது.
 
துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி,  லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டதாகவும், அதேபோல் அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக கிளம்பியதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran