சசிகலாவை விடுதலை செய்திருப்பேன் - மந்திரவாதி அதிர்ச்சி தகவல்


Murugan| Last Updated: செவ்வாய், 14 மார்ச் 2017 (15:13 IST)
தன்னுடைய அகோரி பூஜை வெற்றி பெற்றிருந்தால், சசிகலாவை சிறையிலிருந்து விடுதலை செய்திருப்பேன் என சென்னையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள அகோரி சாமியார் கார்த்திகேயன் தெரிவித்த கருத்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

 
சமீபத்தில், பெரம்பலூர் எம்.எம் நகரில் உள்ள வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில், காவல்துறையினர் சோதனையிட்ட போது சவப்பெட்டி ஒன்றில் அழுகிய  நிலையில் இளம்பெண் பிணம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சோதனையில் அந்த வீட்டிலிருந்து 20 மண்டை ஓடுகள், மனித எலும்புகள் மற்றும் ரத்தம் தோய்ந்த துணிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.
 
அதையடுத்து, அங்கு மாந்த்ரீகம் செய்து வந்ததகவும், பலருக்கு அதை சொல்லிக் கொடுத்து வந்ததாகவும் கூறப்பட்ட கார்த்திகேயேன்(33) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது :
 
அதீத சக்தியை பெற என்னுடைய பூஜைக்கு ஒரு இளம்பெண்ணின் சடலம் தேவைப்பட்டது. எனவே, எனது சிஷ்யர்கள் சென்னை மைலாப்பூர் இடுகாட்டிலிருந்து அபிராமி என்ற இளம்பெண்ணின் சடலத்தை கொண்டு வந்தனர். அந்த சடலத்தின் மீது அமர்ந்து நள்ளிரவுகளில் நடத்திய அகோரி பூஜை வெற்றி பெற்றிருந்தால், இந்த உலகை ஆட்டிப் படைக்கும் பெரும் சக்தியாக உருவெடுத்திருப்பேன்.
 
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை, பூஜை மூலம் வெளியே கொண்டு வந்திருப்பேன். ஒருவேளை நான் கைதானால் கூட, சிறையில் பூஜை செய்து, என் மந்திர சக்தியால் வெளியே வந்திருப்பேன்” என அவர் கூறியுள்ளார். இதுகேட்டு சில போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்ததாகவும், சிலர் வேடிக்கையாக சிரித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :