வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (09:00 IST)

மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம்! – வனத்துறை எச்சரிக்கை!

Leopard
கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறை பக்தர்களை எச்சரித்துள்ளது.



கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில், அறுபடை வீடுகளுக்கு நிகரான ஒரு முருக வழிபாட்டு ஸ்தலமாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் மருதமலை முருகனை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்று கந்த சஷ்டி மற்றும் நாளை கார்த்திகையை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்நிலையில் மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடுவது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பிடிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மருதமலை செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Edit by Prasanth.K