1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (18:41 IST)

காதலியுடன் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய காதலன் ! பரபரப்பு சம்பவம்

நிலக்கோட்டையில் உள்ள எம்.புதுப்பட்டியில் வசிப்பவர் ஆறுமுகம்(33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துப் பேசிவந்தனர்.
இந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறியது. எனவே காதலன் மீது நம்பிக்கை வைத்த இளம்பெண், காதலனுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். அதில்லாமல் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார். 
 
இதனால் இளம்பெண் கர்ப்பமானார். இந்த விவகாரம் மற்றவர்களுக்குத் தெரியும் முன்னர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி இளம்பெண் கேட்டுள்ளார். ஆனால் ஆறுமுகம் மறுத்துவிட்டதோடு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
 
இதுகுறித்து இளம்பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளர். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆறுமுகத்தை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.