திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (10:11 IST)

வருமானத்திற்கு அதிகமாக சொத்து: முன்னாள் அமைச்சர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

kp anbalagan
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னால் அமைச்சர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்தவர் கே பி அன்பழகன். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது.
 
தர்மபுரி நீதிமன்றத்தில் இன்று காலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து இந்த வழக்கு விரைவில் முடிவடைந்து தீர்ப்பு என்ன ஆகும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran