1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2016 (09:55 IST)

சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அதிகமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலச்சந்திரன், கேரளா கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து உள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் மாதத்தில் தமிழகத்தில் வழக்கத்தை விட 40 சதவிகிதம் அதிக மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.