1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 9 ஜனவரி 2021 (12:05 IST)

சென்னை மற்றும் கடலோர படுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் கடலோர படுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

 
அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.