ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 17 டிசம்பர் 2022 (15:59 IST)

டிசம்பர் 20,21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 20,21 ஆல் தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சில நாட்களுக்கு முன் வடக்கிழக்குப் பருவமழை பெய்து வந்த நிலையில், மாண்டஸ் புயல் உருவெடுத்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இதன் பாதிப்புகள் தடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டினால், இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை,  நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவு,  காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அதேபோல், புதுச்சேரியில் 21 ஆம் தேதி நாலை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

Edited By Sinoj