செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (13:38 IST)

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் பெய்து வரும் தென்மெற்குப் பருவமழையால், கடந்த 113 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்தெரிவித்துள்ளது.

 நாளை மற்றும்   நாளை மறு நாள் நீலகிரி, தேனி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், மதுரை ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.