ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (09:26 IST)

நௌல் என்ற புயலுக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை

நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலான மழை பெய்தது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் தொடர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கடல் அலை உயர்வு அதிகரிக்கும்.

அத்துடன்  நௌல் என்ற புயலுக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளனர். இதனால் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்  இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.