Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. மரணம் ; விசாரணை முடியட்டும்.. இருக்கு கச்சேரி - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்

Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (16:27 IST)

Widgets Magazine

ஜெ.வின் மர்ம மரணம் தொடர்பாக, தமிழக அரசு தனது விசாரணையை முடித்து அறிக்கை சமர்பித்த பின் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் அனந்தகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியபோது, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து ஓ.பி.எஸ் ஆதரவு 11 எம்.பி.க்களும் குரல் எழுப்பினர். சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா ஆதரவு எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இதனால் அங்கு சமளி ஏற்பட்டது. 
 
இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் “ஜெ.வின் திடீர் மரணம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவரது மரணம் குறித்து மக்களிடையே சந்தேகம் இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்த பின், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என அவர் கூறினார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குளிர்பான பாட்டிலில் பூச்சிமருந்து: அம்மா உணவகத்தின் சமையல் பெண் பரிதாப பலி!!

குளிர்பானம் உள்ள பாட்டிலில் பூச்சிமருந்தை வைத்திருந்ததால், அதை தெரியாமல் குடித்த பெண் ...

news

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ; தீபாவின் விருப்பம் சேவல் சின்னம்?

விரைவில் நடக்கவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சேவல் சின்னத்தை ...

news

சிகிச்சை அளிக்க தாமதம் செய்த மருத்துவருக்கு அடி உதை (வீடியோ)

சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்ததாக கூறி மருத்துவரை, நோயாளின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் ...

news

உலகின் சிறந்த மற்றும் மோசமான நகரம் எது தெரியுமா?

மெர்சர்ஸ் லிஸ்ட் ஆஃப் சிட்டிஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்த நகரங்கள் ...

Widgets Magazine Widgets Magazine