வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (20:19 IST)

மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வருகை: ஆய்வுக்கு பின் நிவாரண நிதி

டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் குறித்த சேதங்களை பார்வையிட மத்திய குழு நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்க  வேண்டும் என்றும், இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1500 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழுவை தமிழகம் அனுப்பி தக்க நிவாரணம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நாளை மறுநாள் அதாவது 24ஆம் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு வரவுள்ளது. அதன்பின் நவம்பர்  25, 26ம் தேதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு செய்கிறது

ஆய்வு முடிந்த பின்னர் 27அம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய அரசின் நிதி எவ்வளவு என்ற அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.