1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (16:22 IST)

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை-கன்னியாகுமரி தொழில்வழி பாதை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!
சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில் வழி பாதை திட்டம் செயல்படுத்த வேண்டுமென தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக ஏட்டில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது
 
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொழில் வழி பாதை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 590 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையில் தரம் உயர்த்தப்படும் என்றும் இதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வளம் பெருகும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழகத்தின் தொழில் வழி சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து மத்திய அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.