1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2017 (19:56 IST)

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்...

ஜல்லிகட்டு தொடர்பாக தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் மற்றும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகமெங்கும் உள்ள மாணவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், பெண்கள் மற்றும் பொதுமக்களும் குவிந்துள்ளனர். 
 
இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவசர சட்டம் தயாராக உள்ளதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனையடுத்து அவசர சட்டம் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியும் அவர் விவாதித்தார். 
 
அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அனுமதியளித்தபின் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த சட்ட வைரைவுக்கு சிறிய திருத்தங்களுடன்  மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.