1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.N.Vadivel
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (22:52 IST)

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு சொந்தம் கொண்டாடுகிறது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு சொந்தம் கொண்டாடுவதாக தமிழக பாஜக  குற்றம் சாட்டியுள்ளது.
 
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 113ஆவது பிறந்தநாள் விழா , தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் கொண்டாடப்பட்டது.
 
இந்த விழாவில், பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகல் பலரும் கலந்து கொண்டு, ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

 
இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வரும் 2016 சட்டமன்றத் தேர்தல் மூலம், தமிழக மக்களுக்கு ஊழலற்ற, அடக்குமுறை அற்ற, அனைத்து அடிப்படை வசதிகள் கூடிய ஆட்சியை அமைக்க பாஜக பாடுபடும்.
 
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை. மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. அதில் ஒரு பகுதிதான், ‘இந்திர தனுஷ்’ தடுப்பூசி திட்டம்.
 
ஆனால், இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் போது, அதில் பெரும்பாலும் முதல்வர் ஜெயலலிதா படம் இடம் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் திட்டம் என கூறப்படவே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.