தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உதவத் தயார்: மத்திய உள்துறை செயலாளர்!
தூத்துகுடியில் நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு அதனால் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் பலியாகினர்.
இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக மக்கள் மீண்டு வராத நிலையில் இன்று மீண்டும் நடத்தப்பட்ட போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கெளபா தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன், துப்பாக்கிச் சூட்டை நடத்தாமல் தவிர்த்திருக்க முடியுமா? போன்ற கேள்விகளுக்கும் பதியளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.