தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய பட்ஜெட்; ஸ்டாலின் கடும் கண்டனம்

stalin
Last Updated: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (08:53 IST)
2018-19 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் என்பது வெறும் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு தான் என்றும் அதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி 2018-2019 ஆம் நிதி ஆண்டிற்கான பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை நேற்று பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை கண்டுகொள்ளாத பட்ஜெட் என்ற விமர்சனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில்  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த பட்ஜெட் குறித்த தனது கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
tweet
அதில் மத்திய பட்ஜெட்டால் நாட்டு மக்களுக்கோ, நாட்டு வளர்ச்சிக்கோ எந்த பயனும் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக மக்களின் நலன்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தி தரும் விதமாக உள்ளது என்று தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :