Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பேசிக்கொண்டிருந்தபோது வெடித்து சிதறிய சச்சின் செல்போன்


Abimukatheesh| Last Updated: திங்கள், 5 ஜூன் 2017 (13:24 IST)
சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்த சச்சின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

 
அரியலூர் பகுதியைச் சேர்ந்த சச்சின்(28) திருவாரூர் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மொட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. 
 
மோட்டார் சைக்கிளில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் சச்சினுக்கு முகம், தாடை, கைகளில் பயங்கரமாக காயம் ஏற்பட்டது. தற்போது சச்சின் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மேலும் சச்சின் வைத்திருந்தது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன். இருப்பினும் அந்த செல்போன் எப்படி வெடித்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :