டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமிரா: உயர்நீதிமன்றம் பரிசீலனை


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 10 ஜனவரி 2017 (18:53 IST)
தமிழகத்தில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 
பா.ம.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் இது சாத்தியமானதா? என்று கேள்வி எழுப்பினர்.
 
மனுதாரர் தரப்பில், சட்டவிரோத செயல்களை தடுக்கவும், இளம் வயதினர் மது அருந்துவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் என்று வாதிட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் பார்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :