மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த அக்டோபர் 27 அன்று த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சிபிஐ கையில் எடுத்துள்ளது.
சட்ட நடைமுறையாக, கடந்த 18ஆம் தேதி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எஃப்.ஐ.ஆர். தாக்கல் செய்யப்பட்டது. அதில், த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சொந்த ஊருக்குச் சென்றிருந்த 7 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் 11 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கரூருக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் ஆலோசனைகள் நடத்திய பிறகு, சம்பவம் குறித்துக் கள ஆய்வு மற்றும் ஆழமான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
Edited by Mahendran