செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (12:46 IST)

நாகர்கோவில் காசி வழக்கு: நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் அறிக்கை

kasi
பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வழக்கில் கைதான நாகர்கோவில் காசி 120 பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் காசியின் லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்கள் 1900 ஆபாச படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 120 பெண்களை ஏமாற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மோசடி தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக நாகர்கோவில் காசியின் தந்தை தங்கபாண்டியன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாகர்கோவில் காசி வழக்கில் தற்போது சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது