செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (10:39 IST)

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ ரெய்டு!

chidambaram
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீரென கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தொடர்புடைய சென்னை டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சற்றுமுன் சோதனை செய்து வருகின்றனர் 
 
மேலும் ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பான இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாகவும்  பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் சிதம்பரத்தின் மகன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன