1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (08:42 IST)

பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறதா?

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் வழங்கப்படும் என்றும் அரிசி அட்டைதாரர்களுக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் பொங்கல் பரிசு உடன் ரொக்கப்பணமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்களிடமிருந்து எழுந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசாக பணமும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது
 
இது குறித்து கூட்டுறவு துறை பதிவாளர் அனைத்து இணைப்பதிவாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில் பொங்கல் பரிசுடன், ரொக்கப்பணமும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என எழுதப்பட்ட கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
இதனை அடுத்து இந்த ஆண்டும் பொங்கல் பரிசு உடன் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று செய்திகள் கசிந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.