புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (20:14 IST)

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீதான வழக்குகள் ரத்து - முதல்வர் ஸ்டாலின் ஆணை

அரசியல் கட்சி பிரமுகர்கள் 130 பேர் மீது போடப்பட்டுள்ள  அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆட்சியி பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அரசியல் கட்சி பிரமுகர்கள் சுமார் 130 பேர் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆணையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை விஜயகாந்த், நாஞ்சில் சம்பத், கே.என்,நேரு,. கனிமொழி எம்.பி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் 130 பேர் மீது போடப்பட்டுள்ள  அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.