Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இலவச உடலுறவு; பெண்மையை கேவலப்படுத்திய ராதாராஜன்: வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர்கள்!

இலவச உடலுறவு; பெண்மையை கேவலப்படுத்திய ராதாராஜன்: வழக்கு தொடர்ந்த பெண் வழக்கறிஞர்கள்!

திங்கள், 30 ஜனவரி 2017 (16:53 IST)

Widgets Magazine

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை இலவச உடலுறவுடன் ஒப்பீட்டி பேசி கொச்சைப்படுத்தினார் பீட்டா ஆர்வலர் ராதாராஜன். இதனையடுத்து அவருக்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.


 
 
இந்நிலையில் ராதாராஜனின் கருத்து தங்களின் பெண்மையை கேவலப்படுத்தும் விதமாக உள்ளதாக பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
சில தினங்களுக்கு முன்னர் பிபிசி தமிழ் வானொலிக்கு பேட்டியளித்த பீட்டா ஆர்வலர் ராதாராஜன் மாணவர்களின் போராட்டத்தை இலவசமாக உடலுறவுடன் ஒப்பிட்டு பேசினார். இதனையடுத்து ராதாராஜனுக்கு கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன.
 
ராதாராஜனுக்கு எதிராக வழக்கறிஞர் ராஜ்சேகர், தடா ரஹீம் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ராதாராஜனின் பேச்சு தங்களை கொச்சை படுத்திவிட்டதாக அவர்மீது பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகி நளினி கூறியபோது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் இளைஞர்கள் திரண்டு போராடினர். அந்த போராட்டத்தில் நாங்களும் கலந்துகொண்டு போராடினோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன் அவதூறாக பேட்டி அளித்திருந்தார்.
 
இது எங்கள் பெண்மையை கேவலப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இது குறித்து அவர்மீது அவதூறு வழக்கை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளோம். விரைவில் அது விசாரணைக்கு வர உள்ளது என தெரிவித்தார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

போலீசார் வெளியிட்ட வீடியோ அனைத்தும் கிராபிக்ஸ் - திருமா அதிரடி

ஜல்லிக்கட்டு தொடர்பாக போலீசார் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் கிராபிக்ஸ் என விடுதலை ...

news

ஞாபகம் வருகிறதா? அவர் யாரென்று புரிகிறதா? - காந்திக்கு கமல் வாழ்த்து

தேசத்தந்தை என்றழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் இறந்த தினத்தை ...

news

உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது: சட்டசபையில் மசோதா தாக்கல்

உள்ளாட்சி தேர்தலை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த இயலாது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ...

news

கன்னத்தில் பளார் விட்ட அதிமுக பெண் எம்எல்ஏவுக்கு பதிலடி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோரஞ்ஜிதம் ...

Widgets Magazine Widgets Magazine