புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (16:36 IST)

தர்பார் திரைப்படத்திற்கு தடை??

தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் திரைப்படம் வருகிற ஜனவரி 09 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். கதாநாயகியாக நயன் தாரா நடிக்கிறார்.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து போலீஸாக நடிப்பதால் இந்தியா முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் 2.0 திரைப்படத்திற்காக வாங்கிய ரூ.20 கோடி கடனை திருப்பி அளிக்கும் வரை தர்பார் திரைப்படம் வெளியிட தடைகோரி மலேசியாவை சேர்ந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.